Saturday, September 18, 2010

இன்று பார்த்த படங்கள்

1. TEARS OF THE SUN[2003]:
                               ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள Nigeria  எனும் நாட்டில் நடக்கும் அரசியல் மற்றும் மத பிரச்சனைகளால் கலவரம் ஏற்படுகிறது .முஸ்லிம் இனத்தை சேர்ந்த yebuku என்றவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சியை பிடித்து ,கிறிஸ்துவ  இனத்தை சேர்ந்த மக்களை ராணுவம் துணை கொண்டு கொன்று குவிக்கிறார்.இந்த நேரத்தில் அமெரிக்காவும் இதனை கண்டிக்காமல் தனது தூதரகத்தை காலி செய்துவிட்டு சென்று விடுகிறது.ஆனால் கலவரத்தின் காரணமாக காயப்பட்ட  மக்களுக்கு உதவி செய்யும் அமெரிக்க டாக்டர் பெண்மணியையும் , பாதிரியாரையும் காப்பாற்ற 8 பேர் கொண்ட அமெரிக்க படை Bruce willis தலைமயுள் அனுப்பப்படுகிறது .அவர்களும் சரியாக காட்டுக்குள் சென்று டாக்டர்ரிடம் விஷயத்தை சொல்லி கிளம்ப தயாராகும் படி கூறுகின்றனர். ஆனால் அவர் தன்னுடன் இருக்கும் மக்களையும் அழைத்து சென்றால் மட்டுமே வருவேன் என்று கூறுகிறார். Bruce willis முதலில் மறுக்கிறார் ,பிறகு வேறு வழி இன்றி நடக்க முடிகிறவர்களை மட்டும் கூட்டிச்செல்கிறார் .
                                   அந்த காட்டுவழி பயணத்தையும் போரின்   கொடூரத்தையும்  கண்முன்னே காட்சி படுத்துகிறார்கள்.     ஓர் இடத்தில அமெரிக்க விமானம் வந்து கூட்டிசெல்வதாக  இருக்கும் அப்போது Bruce willis ,டாக்டரை மட்டும் விமானத்தில் ஏற்றி கொண்டு படை வீரர்களுடன் சென்று விடுவார் .மக்களை அனாதைகளாக விட்டு சென்றிடுவார். விமானத்தில போகும் பொழுது கீழே ஓர் இடத்தில கலவரகாரர்கள் செய்யும் கொடூரத்தை  பார்த்து விட்டு மீண்டும் காட்டுக்குள்  விமானத்தை தரை இறக்கி விட்டு , தான் கூட்டி வந்த மக்களில் முடிந்தவரை விமானத்தில் ஏற்றிவிட்டு, மீதம் உள்ளவர்களுடன் camaroon நாட்டின் எல்லைக்கு  செல்வார். இந்த நேரத்தில் கலவரக்கார ராணுவம் அமெரிக்க படையின்  நடமாட்டத்தை கண்டுபிடித்து இவர்களை தொரத்திக்கொண்டு வருவர். 
                           போகும் வழியில் வேறு ஒரு கிராமத்தில் கலவரகாரர்கள் செய்யும் கொடுமையை அவர்களை கொன்று தடுக்கிறார். அப்போது ஒரு தாயுன் மார்பகத்தை  வெட்டும் 15 வயது கலவரக்கார சிறுவனை கொன்று அவளை காப்பாற்ற துடிக்கும் அமெரிக்க வீரரின் செயல் கண்ணீரை varavalaikum [ இப்போது புரிகிறது இலங்கை  தமிழர்களின் கண்ணீர் ].
                         ஓர் இடத்தில அமெரிக்க வீரர்களுக்கும் ...100 பேர் கொண்ட கலவரக்காரர்களுக்கும் சண்டை நடகிராது.இருதியுள் அமெரிக்க போர் விமானம் வந்து குண்டு போட்டு Bruce willis மற்றும் மீதம் இருக்கும் 3 வீரகலையும் காப்பாற்றுகிறது . மக்களை  பத்திரமாக எல்லையை கடக்கவைதபின் தான் நமக்கு நிம்மதி   வருகிறது. 




                                            இப்படம் இலங்கையுள் நடக்கும் கொடூரத்தை  கண்முன்னே காட்சிபடுத்துகிறது .
             

              [ இது பட விமர்சனம் கிடையாது இது போல் நான்  பார்க்கும் என்னை பாதித்த படங்கள் பற்றி   பகிர்ந்துகொள்வேன் ]. 
                                         

                                     

Wednesday, September 15, 2010

என் வலைப்பதிவு - ஓர் முன்னோட்டம்



                          
          


                             "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
                                                                                                                              -  மகாக்கவி


                              வணக்கம் ! வலையுலக தமிழர்களே . என்னுடைய இந்த தளமானது ,எந்தவொரு முன்னேற்பாடுகளுமின்றி செயல்பட போகின்றது .இத்தளத்தில் என்னை பாதித்த விசயங்களை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன் .

                                 "அரசியல் முதல்......அறிவியல் வரை ".
                                 "கலை முதல்..............காதல் வரை."


                  இப்படி அனைத்தும் "முதலிலிருந்து .....முடிவுவரை" ...உங்கள் பார்வைக்கு .